ஒரு பெண் எப்போது மகிழ்ச்சி கொள்கிறாள் என்று எப்படி அறிந்து கொள்வது?

ஒரு பெண் எப்போது மகிழ்ச்சி கொள்கிறாள் என்று எப்படி அறிந்து கொள்வது?


ஒரு பெண் எப்போது மகிழ்ச்சி கொள்கிறாள் என்று எப்படி அறிந்து கொள்வது?



பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை பல வகைகளில் வெளிப்படுத்துவார்கள்.

நன்றாக பேசிப் பழகும் பெண்கள், மென்மையான ஆடல் பாடல் மூலம் (மனதிற்குள் பாட்டை முணு முணுத்தல் போல) வெளிக்காட்டுவார்கள், இருக்கும் இடத்தை 1000 வாட் விளக்கு (1000 watt bulb ) கொண்டு வெளிச்சமிட்டது போல அழகாக சிரித்து, அவர்களின் மகிழ்ச்சி மற்றும் எனர்ஜி கதிர்களைப் பிரதிபலிக்கச் செய்வார்கள். இவ்வகையில் வெளிப்படையாக காட்டுபவர்கள் அயல்நோக்கு (extroverted ) தன்மையை உடையவர்கள் எனலாம்.

உள்நோக்கிய எண்ண அதிர்வுகளை (introverted ) வெளிப்படுத்தும் பெண்கள் சிறிய அழகான புன்னகையின் மூலமோ, தனக்கே உரிய புத்தகங்களை அல்லது சிறிய பரிசுகளை கொடுத்தல், நீங்கள் ஒன்றும் கேட்காமலேயே உங்களுக்கு பிடித்த பானத்தை அருந்த கொடுத்தல் போன்ற செயல்கள் மூலமோ தங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவர்.

மகிழ்ச்சியைக் கண்ணாலேயே தெரிவிப்பது, உங்களை எதிர்மறையாகக் கிண்டல் அடிப்பது இவையும் உண்டு. உதாரணத்திற்கு உங்களை 'பிடித்தமான எதிரி' என்று கூப்பிட்டால் நீங்கள் மிகவும் பிடித்த நண்பர் என்று புரிந்து கொள்ளுங்கள்! கோபமே இல்லாமல் 'போ, போ' என்று அடிக்கடி சொன்னால் 'வா, வா' என்று புரிந்து கொள்ளலாம்!

பெண்களின் மகிழ்ச்சி, அவர்கள் உடம்பில் சுரக்கும் சில hormone (ஹார்மோன் ) வகைகளுக்கு ஏற்றவாறு மாறுபடவும் சாத்திய கூறுகள் உண்டு. மாத விடாய் வரும் சமயம், எரிச்சல், முன்கோபம், மன இறுக்கம் இவைகளுடன் இருப்பார்கள்; மாதவிடாய் முடிந்து ஒரு வாரம் கழிந்தால் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்; சில காலங்களில் மிகவும் காதலுடன் வெளிப்படையாக இருப்பார்கள் . இப்படி ஹார்மோன்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப குணங்கள் மாறும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, பெண்கள் (காம உணர்வில்) தங்களுக்குப் பிடித்திருந்தால், ஆவல் இருந்தால், ஆசை இருந்தால் சும்மா இருக்க விடாமல் உசுப்பேற்றி விடுவார்கள், பொய்யாகச் சீண்டிப் பார்ப்பார்கள். ஆண்கள் இவற்றைக் கவனித்துத் தெரிந்து கொள்வது அவசியம். இவ்வாறு இருக்கும் குறும்பான பெண்கள், தைரியமான பெண்கள், வெளிப்படையானவர்கள்.

சிலர் தம் மனதில் இருப்பதை தெரிவிக்க நேரடியாகவே கேட்பார்கள். ஆனால் அப்படி வெளிப்படையாக இல்லாத சாந்தமான பெண்களோ, தங்கள் மகிழ்ச்சியை, ஆவலை, எதிர்பார்ப்பை எதிர் மறையாக, பொய் கோபமாகக் கூட வெளிப்படுத்தலாம்.

சில பெண்கள் சுயாதீன (independent) என்ற வகையின் உச்சத்தை சேர்ந்தவர்கள் என்றால் ஆண்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் சுயகௌரவத்தினால், தம் தேவையைச் சொல்ல மாட்டார்கள். உங்கள் கவனிக்கும் ஆற்றலில் தான் எல்லாமே இருக்கிறது.

பொறுப்பு உணர்ச்சியின் உச்சத்தில் (responsible ) வளர்ந்த பெண்கள் உங்களுக்கான பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள்; உதாரணமாக, வேறு வேலை தேடும் கணவனின் வேலைக்கு விண்ணபிக்க உதவுவது, உங்களுக்கு அவசியமான பத்திரிகை கட்டிங் எடுத்து வைப்பது, உங்கள் வருமான வரிக் கணக்குகளைக் கவனித்து கொள்வது, வெளி வேலைகளில் உங்களுக்கு உதவ உங்கள் கூடவேயே வருவது போன்று எல்லாமே பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். ஏன் இப்படி நம்மைக் குழந்தை போல் பாவிக்கிறார் என்று நினைத்தால் அவர்கள் பொறுப்பு உணர்ச்சியின் உச்சத்தில் வளர்ந்த சூழ்நிலை அல்லது சுபாவம் காரணமாக இருக்கலாம் என்று அறிந்துகொள்ளுங்கள்.

மற்றபடி ஓர் ஆண் தன் மீது (பிறர் முன்னால்) கோபத்தை காட்டாமல் இருந்தால், தனது சுய மரியாதையை மதித்தால், தன் எல்லா விதமான தேவைகளை புரிந்து கொண்டு நடந்தால், பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
Previous Post Next Post

نموذج الاتصال